Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான மடீட்சியா தொழில்முனைவோர் மாநாடு

சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான மடீட்சியா தொழில்முனைவோர் மாநாடு
மடீட்சியா சார்பில் மதுரையில் நடைபெற்ற தொழில்முனைவோர் மாநாட்டில் அமைப்பின் தலைவர் வி.செந்தில்குமார். உடன், அக்ரோ புட் டிரேட் சென்டர் நிறுவனர் எஸ்.ரத்தினவேலு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாடு, புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.

பகிரவும் WhatsApp Facebook

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான மடீட்சியா சார்பில், தி ரெசிடென்சி - சிக்னேச்சர் அரங்கில், `மடிகான் 2026 – எம்.எஸ்.எம்.இ 3.0’ என்ற தலைப்பில் தொழில் முனைவோர் மாநாடு நேற்று முன்தினம் (அக்.10) நடைபெற்றது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாடு, புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டை அக்ரோ புட் டிரேட் சென்டர் நிறுவனர் எஸ்.ரத்தினவேலு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 


சர்வதேச வர்த்தகம் மற்றும் வங்கியியல் நிபுணர் சேதுராமன் சாத்தப்பன், `பில்ட் ஸ்மார்ட் - ஸ்டார்ட்-அப்’ என்ற தலைப்பிலும், வடமலையான் மருத்துவமனை மூத்த இதய நோய் நிபுணர் பி.ஆர்.ஜே.கண்ணன், `ஆரோக்கியமான தொழில் முனைவோர் – செழிப்பான நிறுவனம்’ என்ற தலைப்பிலும், தங்கமயில் ஜூவல்லரி இணை நிர்வாக இயக்குனர் பா.ரமேஷ், `பெரிதாக சிந்தியுங்கள்’ என்ற தலைப்பிலும், மாஃபா நிறுவனர் கே.பாண்டியராஜன், `அளவை விஞ்சி விரிவடைதல்’ என்ற தலைப்பிலும், பிராண்ட் ஆலோசகர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, `பில்டு ஸ்மார்ட் - பிராண்டிங்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். 

புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிபாட்டுதல், தொழில் நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான உத்திகள், தொழில் முனைவோரின் வளர்ச்சி மற்றும் பிராண்டிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே மாநாட்டின் நோக்கம் என்று மடீட்சியா தலைவர் வி.செந்தில்குமார் தெரிவித்தார்.


 



முந்தைய செய்தி
அக்.27-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
அடுத்த செய்தி
Adani Defence & Aerospace wins SIDM Champion Award 2026

தொடர்புடைய செய்திகள்